மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
கடலூர் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்களை காணலாம்.
கடலூர் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்களை காணலாம்.
Published on

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், கோண்டூர் பெரிய மாரியம்மன், மாளிகம்பட்டு முத்து மாரியம்மன், வானமா தேவி முத்துமாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை அம்மன், பெரிய கங்கணாங்குப்பம் ஏழு கரக மாரியம்மன், குச்சி பாளையம் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி சாமி கும்பிட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com