ஞானம் தரும் லட்சுமி ஹயக்ரீவர்

அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது ‘ஹயக்ரீவ அவதாரம்’ என்று சொல்லப்படுகிறது. திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக ‘ஹயக்ரீவர்’ அவதாரம் பார்க்கப்படுகிறது.
ஞானம் தரும் லட்சுமி ஹயக்ரீவர்
Published on

மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று போற்றப்படும் 10 அவதாரங்களில் முதன்மையானதாக மச்ச அவதாரம் இருந்தாலும், திருமால் எடுத்த அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது 'ஹயக்ரீவ அவதாரம்' என்று சொல்லப்படுகிறது.

பிரம்மதேவனிடம் இருந்த வேதங்களை, மது- கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள் திருடிச் சென்று விட்டனர். அதனை மீட்பதற்காக, திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக 'ஹயக்ரீவர்' அவதாரம் பார்க்கப்படுகிறது.

வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் போன்ற அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர், ஹயக்ரீவர். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, வியாசர், சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

ஆனால் அவர்களுக்கு அந்த தகுதியானது, கல்விக்கு அதிபதியாக, ஆதாரமாக விளங்கும் ஹயக்ரீவரின் அனுக்கிரகத்தால் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.

ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியில் அவதரித்தவர், ஹயக்ரீவர். அவரது பெருமைகளை எடுத்துரைக்காத வேதம், உபநிடதம், கல்பம், புராணம் என்று எதுவும் கிடையாது. அனைத்துமே அவரது புகழ்பாடுகின்றன.

ஹயக்ரீவர் எப்போதும் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது அரிதுதான். அவர், தனது மனைவியாக லட்சுமிதேவியை மடியில் அமர வைத்து 'லட்சுமி ஹயக்ரீவர்' தோற்றத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com