திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவில் நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்
Published on

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணி அளவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் மாலை 5 மணி அளவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து, பின்னர் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com