ஆடி அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

ஆடி தமிழ் மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். அதில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.

ஆடி அமாவாசை நாளில் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சாதாரண அமாவாசை நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட வருவார்கள்.

இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் வருகை தந்தனர். தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து, துலாம் பாரம் நேர்த்திக்கடன் செலுத்தி, அழகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூல், பானகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com