பிரம்மோற்சவ விழா: முத்துப்பந்தல், சிம்ம வாகனங்களில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்

திருச்சானூர் கோவிலில் நேற்று முத்துப்பந்தல் வாகன சேவை, சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதிதாயார் எழுந்தருளி காட்சியளித்தார்.
சிம்ம வாகன சேவை மற்றும் முத்துப்பந்தல் வாகன சேவை நடந்தபோது எடுத்தபடம்.
சிம்ம வாகன சேவை மற்றும் முத்துப்பந்தல் வாகன சேவை நடந்தபோது எடுத்தபடம்.
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் முத்துப்பந்தல் வாகனத்தில், ‘ஆதிலட்சுமி தேவி’ அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிம்ம வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன சேவையில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா, துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு அனுமந்த வாகன சேவை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com