பிரம்மோற்சவ 8-ம் நாள்: சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்
சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா நேற்று நடந்தது. காலையில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 8 மணி முதல் 9 மணி வரை வாகன சேவை நடந்தது.

இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன பந்தலில் அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com