கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் சர்வ பூபால, குதிரை வாகன சேவை

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளில் தேரோட்டத்துக்கு பதிலாக சர்வபூபால வாகனச் சேவை நடந்தது.
கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில்சர்வ பூபால, குதிரை வாகன சேவை
கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில்சர்வ பூபால, குதிரை வாகன சேவை
Published on

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.35 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை தேரோட்டத்துக்கு பதிலாக சர்வபூபால வாகனச் சேவை நடந்தது.

அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குதிரை வாகனச் சேவை நடந்தது.

வாகனச் சேவையில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com