மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்குகிறது

இந்த திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.புதன்கிழமை அத்தாழ பூஜை நடைபெறும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்குகிறது
Published on

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது.

நாளை மறுநாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com