சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

உற்சவத்தில் 9 நாட்களும் விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.13-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்

இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிமுதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

5-ந் தேதி வெள்ளிசந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந்தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடக்கிறது.

9-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந்தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.

12-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ரதோத்றவக் காட்சி தேர் உற்சவம் நடக்கிறது.

13-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும்.

6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.

14-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்சவத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.

இவ் வைபவத்தில் 10 நாட்களும் இரு வேளைகளிலும் யாகங்களும் 4 வேத (ரிக், யஜூர், சாம, அதர்வண) பாராயணங்களும், பன்னிரு திருமுறைகளும் பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சியும், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் மற்றும் ருத்ராபிஷேகம், அன்னதானமும் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் டிரஸ்டி பாஸ்கர தீட்சிதர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com