முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

அன்னையின் புகழ்மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
Published on

முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் குடும்ப பெருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அன்னையின் புகழ்மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது.

விழாவின் இறுதி நாளான நேற்று காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 9 மணிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்தந்தை சேவியர் பெனடிக் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது.

மருதன்கோடு பங்கு அருட்தந்தை ஜான்சேவியர் அருளுரை வழங்கினார். தொடர்ந்து 11 மணிக்கு மலையாள மொழியில் திருப்பலி, அன்னையின் தேர் பவனி, மாலை 6 மணிக்கு அருட்தந்தை அருள் தலைமையில் திருப்பலி, கொடி இறக்கம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com