வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது. 8-ந்தேதி இரவு அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது.
ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.
ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் முக்கிய விழா வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது.

9-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com