திருவட்டார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

விழாவில் ஒரு லட்சம் ஆஞ்நேய நாமங்கள் ஜெபிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவட்டார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
Published on

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைக்கும் பணிகள் மற்றும் சிலை அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் நேற்று ஆஞ்சநேய சித்தர் தலைமையில் மகா ஆஞ்சநேய லட்சார்ச்சனை விழா நடந்தது. அபிஷேகம், பூஜைகள், சிறப்பு தீபாராதனை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஒரு லட்சம் ஆஞ்நேய நாமங்கள் ஜெபிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com