2026 ஆனி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் தாமதம் ஏற்படும்.
Aani month rasipalan
2026 ஆனி மாத ராசிபலன்
Published on

தனுசு

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் குரு. அங்கே உச்சமும் பெற்றிருக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. எல்லாவற்றிலும் தடை, தாமதம் எந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். நினைத்தது ஒன்றும். நடப்பது ஒன்றுமாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். வீண் பழிகளுக்கு ஆனாக தேரிடும். வரவு வருவதற்கு முன்பே செலவு காத்திருக்கும், மாதம் முழுவதும் மகிழ்ச்சி குறையாமல் இருக்க சிந்தித்து செயல்பட வேண்டும்.

செவ்வாய்

ஆனி மாதம் 5-6 தேதி (19.6.2026) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் பஞ்சம விரயாதிபதியான அவர், சத்கு ஸ்தானத்திற்கு வரும் பொழுது எதிரிகளின் பலம் குறையும். இருப்பினும் மனக்கவலை அதிகரிக்கும். உறவினர்கள் பகையாக மாறலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சேர்த்து வைத்த சேமிப்புகள் கரையும். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் தாமதம் ஏற்படும்.

சிம்ம சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன். ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 61 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் போது. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். கற்ற கல்விக்கேற்ற வேலை அமையும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே, வேறு வேலைக்கு செல்லலாமா? என்று நிளைத்தவர்களுக்கு, வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரலாம். கூட்டுத்தொழில் புரிவோர் தனித்து இயங்கும் முயற்சியில் ஆர்வம் மாட்டுவர். எதிர்பாராத இடமாற்றம் நன்மை தரும்.

சனி வக்ரம்

ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2. 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தன ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றத்தை சத்திக்க நேரிடும். உங்கள் ராசி மற்றும் 6, 10 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவர் செலவு கூடும். எந்த ஒரு காரியத்தை செய்யும்போதும் மனக்கலக்கம் உருவாகும். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். குறிப்பாக யாரையும் நம்பி செயல்பட முடியாத நேரம் இது கூட்டுத்தொழில் புரிவோருக்கு கலை அதிகரிக்கும். பங்குதாரர்கள் விலகுவதாகச் சொல்லி அச்சுறுத்திய மனநிலை மாறவேண்டுமானால் மந்தன் எனப்படும் சனியை வழிபடவேண்டும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. கலைஞர்களால் அதிசு முயற்சி எடுத்து நான் வெற்றி பெற முடியும். மாணவ மாணவிகளுக்கு மற்றி அதிகரிக்கும் பெண்களுக்கு வரவை விட செலவு கூடும். உறவினர் பகை உருவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்!-

ஜூன்: 20, 21, 24, 25, ஜூலை: 3, 4, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.

மகரம்

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் ஈளி சகலய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மாதக் கடைசியில் அவர் வக்ரமும் பெறுகிறார் ஆனால் தற்சமயம் பெயர்ச்சியான் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப நல்ல சந்தரப்பங்கள் பலவும், இம்மாதம் உங்களைத் தேடி வரப்போகிறது. பகைவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றிகாணப் போகிறீர்கள். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் நீங்கள் எது நடக்க வேண்டும். என்று சிந்தித்தீர்களோ அது நடைபெறும், பொருளாதார நிலை திருப்தி தரும்.

ரிஷப -செவ்வாய்

ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4. 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செல்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் பொழுது, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும் வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அசையாச் சொந்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர்களது திருமணம் சம்பந்தமாகவோ, வெளிநாடு சென்று படிப்பது சம்பந்தமாகவோ வேலை கிடைப்பது சம்பந்தமாகவோ செய்யும் முயற்சி பயன்தரும்.

சிம்ம-சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 5. 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் அஷ்டமத்திற்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளாலும், பெற்றோராலும் மனக்கசப்பு தரும் தகவம் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கூட்டாளிகளின் போக்கை உங்கள் மனநிலை ஏற்றுக்கொள்ளாது. இக்காலத்தில் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சனி வக்ரம்

ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அனைத்து செயல்பாடுகளிலும் தட்டுப்பாடுகளும், தடைகளும் வந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை கூடும். உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களில் சளியின் பார்வை பதிகிறது. எனவே பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. நல்ல இடத்தில் வேளை பார்த்து வந்த பிள்ளைகள், அதை விட்டு விலகிக்கொள்ள நேரிடும். பாகப்பிரிவிளை இழுபறி நிலையில் இருக்கும். பகை உணர்வு மிக்கவர்கள் பக்கத்தில் இருப்பர். பயணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணி மாற்றம் அல்லது பணி நீக்கம் செய்யப்படும் அளவிற்கு பிரச்சினைகள் வரலாம்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முக்கிய நபர்களின் ஆதரவு உண்டு, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு தன்னிப்போன ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு, பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும். பொருமா தார நிலை உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்?

ஜூன்: 22, 23, 26, 27, ஜூலை: 5, 6, 11, 12,

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்,

கும்பம்

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவின் பார்வை சனி மீது பதிவதால் இரண்டாமிடம் புனிதமடைகின்றது. ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நரிதமாக நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உண்டு, பொருளாதார நிலை திருப்தி தரும். இருப்பினும் ஆறில் குரு இருந்தால் ஊரில் பகை' என்பார்கள். எனவே நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷப -செவ்வாய்

ஆனி மாதம் 5-ந் தேதி (19.5.2020) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சியும், மதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். கடன்கள் வசூலாகி கவலையைப் போக்கும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பர். நம்பிக்கைகள் நடைபெறும் நேரம் இது.

சிம்ம சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4. ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் பொழுது திருமணம் போன்ற சுயகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும், தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு, வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

சனி வக்ரம்

ஆனி 31-த் தேதி (15,7.2006) அன்று மீன ராசியில் சளி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறு வது அவ்வளவு நல்லதல்ல மனப்பயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலலது. திடீர் விரயங்கள் வந்துசேரும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடும். சனிஸ்வரர் வழிபாடும் இக்காலத்தில் உங்களுக்குத் தேை

உங்கள் ராசிக்கு 1. 5. 11 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனவே இக்காலத்தில் தாயின் உடல்நலம் சீராகும். தனவரவிற்கு பஞ்சமில்லை என்றாலும், விரயங்கள் மிக அதிகமாக இருக்கும் வாக னப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இருந்த தெருக்கம் குறையும். உடன்பிறப்புகளால் ஒருசில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பிறரை நம்பி ஏமாறும் வாய்ப்பு உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்.-

ஜூன்: 25, 26, 29, 30, ஜூலை 7, 8, 12, 18.

மகிழ்ச்சி தரும் வண்ணம் கிரே.

மீனம்

பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை ராசியில் பதிவதால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆதரவு தருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உச்சம் பெறும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர்.

ரிஷப -செவ்வாய்

ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2006) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2. 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழில் முன்னேற்றத்திற்கு முதலீடு செய்ய கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். சகோதர வழி ஒற்றுமை திருப்திகரமாக அமையும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். இதுவரை மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை பெற்றொர் உங்களிடமும் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை வைத்துக் கொள்ளலாமா? கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். நட்பாய் நன்மை கிடைக்கும் நேரம் இது.

சிம்ம - சுக்ரன்

கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன். ஆனி 21-ந் தேதி (5.7.2004) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 8-க்கு அதிபதியான அவர் 6ம் இடத்திற்கு வருவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப போக பலன்கள் வரப்போகிறது. எதிர்பாராத நல்ல திருப்பங்களும், சம்பவங்களும் நடைபெறும். உத்தியோகத்தில் திடீர் பதவி உயர்வும், திரவிய லாபமும் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்தசேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

சனி வக்ரம்

ஆவி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். விரயாதிபதி வக்ரம்பெறுவது நன்மைதான் என்றாலும், லாபாதிபதியாகவும் சனி பகவான் இருப்பதால் பண நெருக்கடி அதிகரிக்கும். கடன், கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும். உங்கள் ராசிக்கு 3, 7, 10 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனவே உடன்பிறப்புகளின் குணங்களில் மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. கல்யாண முயற்சியில் தாமதம் ஏற்படும். கடமையில் தொய்வு ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோக மாற்றம் உள்ளத்தை வாடவைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பாதை புலப்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு விருதும், பாராட்டும் உண்டு, பெண்களுக்கு மனக்கவலை தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்

ஜூன்16, 17, 27, 28, ஜூலை 3, 4, 9, 10, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

X

Maalai Malar
www.maalaimalar.com