

பராபவ வருடம் ஆளி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குரு 4-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். அரத்தாஷ்டம குருவாக இருந்தாலும், அவரது பார்வையால் நல்ல பயன்கள் உங்களுக்கு வந்நிணையும். இருப்பினும் உடல்நலத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். பயணங்கள் பலன்தரும். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதோடு கூடுதலான பொறுப்புகளும் வந்துசேரும்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று ரிஷப ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதனான அவர் தன ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். நாலாபுமும் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். இடம் வாங்குவது. பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் இதுவரை ஒத்துவராத கூட்டாளிகள் இப்பொழுது ஒத்துவருவர். மேல் முதலீடு செய்து தொழில் வளர்ச்சி பெருக வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வரும்.
கடக ராசியில் சஞ்சரித்து வரும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். அங்குள்ள கேதுவோடு இணைந்து சஞ்சரிக்கப்போகிறார். வாழ்க்கைத் துணையோடு கொஞ்சம் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்க்க அதிகம் செலவீடுகள், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் இருந்த தொய்வு அகலும். சகப் பணியாளர்களின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள்.
ஆவி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான் தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே சமயம் குருவின் பார்வை சனியின் மீது பதிவதால் அதன் கடுமை குறையும் எனவே தொழிவில் இருந்த குறுக்கீடுகள் படிப்படியாக அகலும்
சனியின் பார்வை 2, 6, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. வக்ரம் பெற்ற சனியின் பார்வை என்பதால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும் நிம்மதி கிடைக்க குலதெய்வப் பிரார்த்தனைகளையும், இஷ்ட தெய்வப் பிரார்த்தனைகளையும் மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். அதே சமயம் பெற்றோர் வழியில் கொஞ்சம் ஆதரவு குறைய லாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டிய நேரம் இது. கூட்டாளிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்காமல் இருக்க அவ்வப்போது கணக்குகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக தேடிவரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்!-
ஜூன்: 15, 18, 19, 29, 30, ஜூலை: 5, 6, 11, 12, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.
பராபள வருடம் ஆளி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்ற குருவோடு கூடி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே உடன்பிறப்புகள் வழியில் உதவி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக் குறை அகலும், புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சென்ற மாதத்தில் நிறைவடையாத சில காரியங்கள் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக நடைபெறத் தொடங்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய வேலைக்காக செய்த முயற்சி கைகூடும் பின்னைகள் வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபகாரியம் இம்மாதம் முடிவடையும்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று செவ்வாய். உங்கள் ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 7. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும்போது விரயங்கள் அதிகரிக்கும். நல்ல காரியங்கள் நடப்பதற்காகவும், நாகரிசுப் பொருட்கள் வாங்குவதற்கும் செலவிடுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகாவிட்டாலும், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக மூலதனம் செய்ய ஏதேனும் சொத்துக்களை விற்கும் சூழ்நிலை உருவாகும். சுபச்செலவுகள் வரும் வாய்ப்பு உண்டு. தூரதேசப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தென்படும்.
கடக ராசியில் சஞ்சரித்து வரும் சுக்ரன். ஆளி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பெற்றோர் வழியில் பிரியும் கூடும். இடம், வீடு வாங்குவதில் கவனம் செலுந்துவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்கள் வாழ்க்கை மாறும் விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். கருத்து வேறுபாடு நீங்கி கலகலப்பான சூழ்நிலை உருவாகும் உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
ஆசி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீள ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாக அவர் இருக்கிறார். அதோடு உங்கள் ராசிக்கு அஷ்டம-லாபாதிபதியாகவும் விளங்குவதால், அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும், சனி பகவான் லாபாதிபதியாகவும் இருப்பதால், இந்த வக்ரமானது அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் குருவின் பார்வை சனியின் மீது பதிவதால், அதன் கடுமை கொஞ்சம் குறையும். உங்கள் ராசிக்கு 1, 5, 8, ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனவே அந்தந்த இடங்கள் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரமாக சனி விளங்குவதால் அதன் பார்வையால் நன்மையே அதிகம் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும் எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவு நனவாகும். முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகல, பாகப் பிரிவினைக்கு செய்த முயற்சி கைகூடும். வீட்டில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்க கல்கள் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்:16, 17, 20, 21, ஜூலை: 3, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம் ஆரஞ்சு.
பராபவ வருடம் ஆளி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியன் இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது 2-ம் இடத்தில் சஞ்சரித்து உச்சம் பெறுகிறார். தன ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் தனவரவு திருப்திகரமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியம் தானாக நடைபெறும், கொடுக்கல் வாங்கல்களில் இருந்த இடர்பாடுகள் அகலும்.
ஆனி மாதம் 5-6 தேதி (19/6.2026) அன்று ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் ஸாபா நிபதியாக விளங்கும் அவர். விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயம் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். சுபச் செலவுகளை மேற்கொள்வதன் மூலம் மீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். பத்திரப் பதிவில் இருந்த இடையூறு அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான நேரம் இது சோதனைக் காலம் என்று கூடச்சொல்லலாம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு பணிச்சுமையை அதிகமாகக் கொடுப்பர். திசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு, உத்தியோகத்தில் இருந்து விலகிச் செல்லும் சூழல் உருவாகும்.
ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு சுகரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம விரயாதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது, பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க ஒரு பெரும் தொகையை செலவிடுவீர்கள். குறிப்பாக பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவோ. வெளிநாடு சென்று பணிபுரிவதற்காகவோ. நீங்கள் செய்யும் புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொண்டு உங்களுக்கு கிடைத்த பங்கில் என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு திருப்தி தரும். அதிகப் பயணங்களின் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு.
ஆணி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீள ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதியான அவர், தனது வக்ர காலத்தில் நன்மைகளைத் தொடர்ந்து செய்தாலும் ஒருசில சமயங்களில் இனம்புரியாத கவலைக்கு ஆட்படுத்திவிடுவார். குரு பகவான் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் குருவின் பார்வை அவர் மீது பதிகிறது. எனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனியின் பார்வை 4, 7. 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. எனவே தாயின் உடல்நலம் சீராகும். இடம் வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கட்டிய வீடு பாதியில் நிற்கின்றதே' என்ற கவலை இனி மாறும் உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ வாழ்க்கைத்துணை அமைவதற்கான வழிபிறக்கும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் மன்ற ஆசை நிறைவேறும் உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாமதப்பட்ட பதவி தடையின்றி கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்பங்கள் அகலும். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் உள்ளவர்கள் உங்கள் குணம் அறிந்து நடந்துகொள்வர்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 18, 19, 22, 23, ஜூலை: 5, 6, 9, 10, 15, 16
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கும், 9-ம் இடத்திற்கும் அதிபதியானவர் குரு பாக்கியாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் பலவழியிலும் நன்மை ஏற்படும் நினைத்தது நிறைவேறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வந்துசேரும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை ஒவ்வொன்றாக அகலும் நிலைமை சீராகி நிம்மதி காண்பீர்கள். தொழில் போட்டிகள் அகலும் வர்த்தக கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறும் டுகள் சமரசமாக முடியும்.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று ரிஷப ராசிக்கு செய்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழிலில் முன்னேற்றமும், கூடுதல் லாபமும் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் நடத்தும் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கலையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பனம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம் ஜாதகம் பலம் பெற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்துவ போகம் உண்டு, என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம். இப்பொழுது அதிக விலைக்கு விற்று அதன் மூலமும் லாபம் கிடைக்கும்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுகரன். ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 1, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் குடும்ப ஸ்தானத்திற்கு வரும் பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீள ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7. 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். குருவின் பார்வை சனியின் மீது பதிவதால், இந்த வக்ர காலத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. அதே சமயம் எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும் சளியின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவதால் முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும் முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப் போடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாட்டில் பணிரிவோருக்கு குடியுரிமை கிடைப்பது தாமதமாகும். இளைய சகோதரருடன் உள்ள கருத்துவேறுபாடு நீடிக்கும். இதுபோன்ற தேரங்களில் குலதெய்வம், இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நினைத்தபடியே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டு. மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்தசேரும் தேவைக்கேற்ற வருமா ணம் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்!-
ஜூன்: 20, 21, 26, 27, ஜூலை: 7, 8, 9, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர் நீலம்.