திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

உணவு, குடிநீர், டீ, காபி, பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
tirupati
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

திருப்பதி கோவில்

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தரிசனம்

நேற்று முன்தினம் மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

நேற்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தரிசன வரிசையில் இருந்து ஷீலா தோரணம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.

திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். 27,606 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.08 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com