தை அமாவாசை: செய்யக்கூடாதவை

தை அமாவாசையான இன்று பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும். இன்று சில விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
தை அமாவாசை: செய்யக்கூடாதவை
Published on

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

X

Maalai Malar
www.maalaimalar.com