மன்னாதீஸ்வரர் கோவிலில் திருமணங்களுக்கு தடை

பிரசித்திபெற்ற பச்சைவாழி அம்மன், மன்னாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பச்சைவாழி அம்மன், மன்னாதீஸ்வரர் கோவில்
பச்சைவாழி அம்மன், மன்னாதீஸ்வரர் கோவில்
Published on

கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியகோவில் கிராமத்தில் பிரசித்திபெற்ற பச்சைவாழி அம்மன், மன்னாதீஸ்வரர் கோவில் உள்ளது. கடலூர் திருவந்திபுரம் கோவிலில் நடப்பது போன்று, இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com