கடையநல்லூரில், நாளை தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேலக்கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கருமாரியம்மன்
கருமாரியம்மன்
Published on

மேலக்கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று சாந்தி ஹோமத்தை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) 4-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 9.20 மணிக்கு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com