வேலூர் செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
Published on

2-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை நிர்மாணம், தீபாராதனையும், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகபூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. 3-வது நாளான நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு விசேஷ சாந்தி, 2-ம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம் ஆகியவையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடந்தது. தினமும் திரளான பக்தர்கள் அம்பாளை தரிசித்து யாக சாலையையும் வலம் வந்து தரிசித்தனர்.


கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலும் கோவிலுக்கு வெளியிலும் திரண்டிருந்தனர். 9 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் சிவாச்சாரியார்கள் மூலம் கோவில் சன்னதியை சுற்றி எடுத்து வரப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com