பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

வருகிற பவுர்ணமியையொட்டி சதுரகிரி மகாலிங்கசாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி
Published on

பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சாப்டூரில் தென் மாவட்ட அளவில் பிரசித்திபெற்ற சதுரகிரி மகாலிங்க சாமி கோவில் உள்ளது. மலை மீது உள்ள இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் சாமி கும்பிட செல்வார்கள். பக்தர்கள் மலையேறுவதற்கு தாணிப்பாறை வனத்துறை கேட்டுகள் 4 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டு அனுமதி அளிக்கப்படும். மேலும் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஏறவும், இறங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி அன்று பவுர்ணமி வருகிறது. அதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் சாமி கும்பிட செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத் துறையினர் கூறும்போது, தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் சதுரகிரி மலை பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மழை பெய்யாமல் இருந்தால் மட்டுமே மலை மீது ஏறவும், இறங்கவும் அனுமதி அளிக்கப்படும். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும். அதுவும் பக்தர்கள் நலன்கருதி முடிவு எடுக்கப்படும். அதன்படி வருகிற பவுர்ணமியையொட்டி பக்தர்கள் சாமி கும்பிட செல்வதற்காக 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் மழை பெய்தால் அனுமதி அளிக்கப்படமாட்டாது. எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com