ஆத்ம பலம் தரும் ருத்ராட்ச குளியல்

தினமும் ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம். தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை, சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்களிலும், அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்.
ருத்ராட்சம்
ருத்ராட்சம்
Published on

தினமும் குளிக்கும் நீரில் ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை, குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, குளியலறைக்குள் கிழக்கு நோக்கி நிற்க வேண்டும். வாளி தண்ணீரில் புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வைத்துக் கொண்டு சிவமந்திரம் ஒன்றை 12 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்.

தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம். தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை, சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்களிலும், அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்.

ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்ச குளியல் செய்யத் தொடங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். இப்படிச் செய்து வருவதால், ஆத்ம பலம் அதிகரிக்கும். பிறர் நமக்கு எதிராக செய்த, செய்துவிட்ட, செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகலும் நம்மையும், நமது இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும். உணவு, உடை, இருப்பிடம், காற்று, நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், நமது ஆன்மிக பலம் குறைந்து வருகின்றது. அதை ஈடுசெய்யக் கூடியதுதான் இந்த ருத்ராட்சக் குளியல்.

பொ.பாலாஜி கணேஷ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com