பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது
Published on

பிள்ளையார்பட்டியில் கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை மூலவராக கொண்ட ஒரே குடவறைக்கோவில் இதுவாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 101 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

1-ந்தேதி வரை தினசரி காலை, மாலை வேளைகளில் 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com