நெல்லையப்பர் கோவில் ஆனித்தேர் திருவிழா நடைபெறுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு கோவில்களை திறக்கவும், விழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்படாததால் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேர் திருவிழா நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் நிலவுகிறது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லையப்பர் கோவில்
Published on

ஊரடங்கில் தளர்வாக வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தெரிவித்தபோதும் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தென் தமிழகத்தில் பழமையான கோவிலான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் முதன்மையானது ஆனிப்பெருந்திருவிழா எனப்படும் தேர் திருவிழா ஆகும். ஆனி மாதம் 10 நாட்கள் விழா விமரிசையாக நடைபெறும். தேரோட்டம் அன்று 5 தேர்கள் ரதவீதியில் ஆடி அசைந்து வரும் அழகை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு ஊரடங்கால் பல்வேறு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே இந்த ஆண்டு கோவில்களை திறக்கவும், விழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்படாததால் ஆனித்தேர் திருவிழா நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் நிலவுகிறது. அதே நேரத்தில் கொரோனா குறைந்து ஆனித்தேர் திருவிழா நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com