

4-ம் திருவிழாவான 20-ந் தேதி (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 26-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலும் காந்திமதி அம்பாளுக்கு முளைக் கட்டு திருவிழாவும், வளைகாப்பு வைபவமும் நடக்கிறது. அப்போது காந்திமதி அம்பாளை அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டி வைத்து, வளைகாப்பு நடத்தி, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும். இதைத்தொடர்ந்து அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
இதை தொடர்ந்து சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்பாள் மடியில் கட்டி வைத்திருந்த முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிர சாதமாக வினியோகிப்பார்கள்.