நரகாசூரனின் அட்டகாசம்

நரகாசூரனின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக சென்ற காரணத்தால், கிருஷ்ணர், அவனோடு போர் புரிந்து சுதர்சன சக்கரத்தால் அவனை வதம் செய்தார்.
நரகாசூரனின் அட்டகாசம்
Published on

அதிதியின் மகத்தான காதணியைத் திருடியவன், நரகாசூரன். இவன் தன்னுடைய தாயாரை பலரும் பழித்த காரணத்தால், உலகில் உள்ள பெண்கள் அனைவரையும் துன்புறுத்த நினைத்தான்.

அதனால் பல பெண்களை பிடித்துச் சென்று தன்னுடைய இடத்தில் அடைத்து வைத்தான். அவர்கள் 16 ஆயிரம் பேர். நரகாசூரனிடம் இருந்து மீட்கப்பட்ட அந்த பெண்களைத் தான் பின்னாளில் கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டார்.

நரகாசூரனின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக சென்ற காரணத்தால், கிருஷ்ணர், அவனோடு போர் புரிந்து சுதர்சன சக்கரத்தால் அவனை வதம் செய்து, அதிதியின் காதணிகளையும் மீட்டார். நரகாசூரன் இறந்த தினத்தை ‘நரகா சதுர்த்தி’ என்றும், ‘தீபாவளி’ என்றும் கொண்டாடுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com