மங்கலம் தரும் மஞ்சள்

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள். காரணம் அது ஒரு மங்கலப் பொருள் ஆகும்.
மங்கலம் தரும் மஞ்சள்
மங்கலம் தரும் மஞ்சள்
Published on

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள். காரணம் அது ஒரு மங்கலப் பொருள் ஆகும். எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து, மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி, தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும்.

பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம். சுமங்கலிப் பெண்கள் யாராவது நம் வீட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இப்படிச் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்பிக்கை நிலவுகிறது. நீண்ட ஆயுளும், ஐஸ்வரியமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருட்களில் உபயோகப்படுத்துவது வழக்கம்.

விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். புத்தாடை அணியும் பொழுது மஞ்சள் தடவி அணிந்தால் ஆடை, அணிகலன்கள் சேரும் என்பதும் நம்பிக்கை.

X

Maalai Malar
www.maalaimalar.com