ஒரு மாலை.. ஒரே மந்திரம் தான் சொல்ல வேண்டுமா?

குறிப்பிட்ட ஒரு மந்திரம் அல்லது ஸ்துதியை ஒரே மாலையின் மூலம் ஜெபிப்பது தான் முறை என்று கூறுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஒரு மாலை.. ஒரே மந்திரம் தான் சொல்ல வேண்டுமா?
Published on

ஒருவர் உபயோகிக்கும் ஜெப மாலையை, மற்றவர்கள் உபயோகிப்பதை தவிர்க்கும்படி ஆன்றோர்கள் சொல்லி உள்ளனர். மேலும், குறிப்பிட்ட ஒரு மந்திரம் அல்லது ஸ்துதியை ஒரே மாலையின் மூலம் ஜெபிப்பது தான் முறை என்றும், அந்த மாலையை வெவ்வேறு மந்திரங்கள் ஜெபிக்க பயன்படுத்துவது கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

எந்த ஒரு மந்திரத்தையும் ஒரு லட்சம் முறை ஜெபித்தால் அந்த மந்திரம் பூரண உயிர்த்தன்மை பெற்றதாக மாறிவிடுகிறது. அதன் பிறகு, அந்த மந்திரத்தை பத்தில் ஒரு பங்கு யாகமாகவும், அர்க்கியமாகவும் செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மந்திரம் முற்றிலும் பலம் பெற்று ஜெபிப்பவருக்கு நன்மை தரத்தக்கதாக மாற்றம் பெற்றுவிடுகிறது என்றும் ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com