திருவண்ணாமலை தீர்த்தங்கள்-இந்திர தீர்த்தம்

இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துதான், தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான்.இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.
திருவண்ணாமலை தீர்த்தங்கள்-இந்திர தீர்த்தம்
Published on

திருவண்ணாமலையில் தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும்.

இங்கு இந்திரலிங்கமும், இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன.

இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துதான், தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான்.

மேலும் இந்திர பதவியில் நீடிப்பதற்கும் உரிமை பெற்றான்.

இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.

அருணாச்சலேஸ்வரருக்கு தென்கிழக்கில் அக்னி லிங்கமும், அக்னி தீர்த்தமும் உள்ளது.

இந்த தீர்த்தத்தில் தான் அக்னி தேவன் நீராடி, நினைப்பால் உண்டான பாவத்தை நீக்கி கொண்டான்.

பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com