திருவண்ணாமலை-செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு

அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை.இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை விசேஷ வழிபாடு நடக்கும்.
திருவண்ணாமலை-செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு
Published on

மலைவலம் வர சிறந்த நாள் பவுர்ணமி, சிவராத்திரி கிரிவலம் மிகச்சிறப்பு என்று முன்பே பார்த்தோம்.

இதைவிட அதி சூட்சுமமான "வியா தீபாத யோக நாள்" அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கூறுகின்றனர்.

இந்த நாளை பாம்பு பஞ்சாங்கம் மற்றும் அர்ச்சகர் பஞ்சாங்கங்களில் மட்டுமே மதிப்பிடுவதாகவும் கூறுகின்றனர்.

அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்

சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும்.

ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு.

அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில்.

அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய காரகன் அங்காரகன்.

ஆகவே இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.

அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com