திருமணம் கைகூட... திருமணமாக வேண்டும் என்று பார்வதியே சென்று வந்த தலம்

திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.
திருமணம் கைகூட... திருமணமாக வேண்டும் என்று பார்வதியே சென்று வந்த தலம்
Published on

திட்டை திருத்தலம் கோயிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது.

ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும்.

குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.

ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள்.

குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள்.

திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள்.

தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள்.

இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள்.

சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.

திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும்.

வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com