சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்!

சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும். மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்!
Published on

சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்

சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.

அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.

கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!

இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com