புரட்டாசி வழிபாடு வழிமுறைகள்

துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.மாலையிலும் மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.
புரட்டாசி வழிபாடு வழிமுறைகள்
Published on

புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நாளாகக் கருதப்படுகிறது.

அன்று வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.

சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம்.

பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.

விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.

துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.

பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.

வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.

மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது.

வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com