பிறவிப்பலன் பெறலாம்

அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
பிறவிப்பலன் பெறலாம்
Published on

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,

அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு

பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.

ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,

மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.

முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,

வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,

ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com