முதல் பூஜை ராமானுஜருக்கே!

இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலை ஸ்ரீராமானுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.
முதல் பூஜை  ராமானுஜருக்கே!
Published on

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரிடம் ஐக்கியமான ஸ்ரீராமானுஜர் இன்றும் உடலாலும் வாழ்கிறார்.

இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோவிலை ஸ்ரீராமானுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீராமானுஜருக்கு ஆயுள் 200 ஆண்டுகள் என்றும், ஆனால் அவர் தனது 120-வது வயதில் சித்தி அடைந்து விட்டதால், மீதமுள்ள 80 ஆண்டுகள் கழிக்க அடுத்த பிறவியில் ஸ்ரீ மணவாள மாமுனிகளாக அவதாரம் எடுத்து 80 ஆண்டு காலம் வாழ்ந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீராமானுஜர் அவதரித்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைணவத்தில் மட்டுமின்றி ஆன்மிக உலகில் அரிய புரட்சிகளை உருவாக்கிய ஈடு, இணையில்லாத அம்மகானை மனதார வணங்கி பலன்கள் அடைவோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com