மருதமலை-மூலஸ்தான முருகன்

நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!
மருதமலை-மூலஸ்தான முருகன்
Published on

இயற்கையழகுமிகு மலைகளுக்கிடையில் இதயம் போல காட்சியளிக்கும் அழகிய மலைக்கோவிலாம் மருதமலை இதயத்தை ஈர்க்கிறது.

பேரெழில் வாய்ந்த முருகப்பெருமானின் பேரழகைக் கச்சியப்ப முனிவர்,

'ஆயிரங்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு எழுந்த மேயின எனினும் செவ்வேள் விமலமாற் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்கு ஆற்றாது என்றிடில் இணைய தொல்லோன் மாயிருவடிவிற்கெல்லாம் உவமையார் விடுக்க வல்லார்',

என்று பாடுவார்.

அதே போல் இத்திருக் கோவிலில் மருதமலையான், சிரசில் கண்டிகையுடனும், பின் பக்கம் குடுமியுடனும், கோவணங்கொண்டு, வலது திருக்கரத்தில் ஞானத்தண்டேந்தி,

இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து உண்மையறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com