குலதெய்வ அருளை பெற்று தரும் புரட்டாசி விரதம்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
குலதெய்வ அருளை பெற்று தரும் புரட்டாசி விரதம்
Published on

புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம்.

அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்!

மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்!''

என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.

இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com