காரிய சித்தி அருளும் விநாயகர் புரட்டாசி விரதம்

இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
காரிய சித்தி அருளும் விநாயகர் புரட்டாசி விரதம்
Published on

ஸித்தி விநாயக விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது.

பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம்:

புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம்:

புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள்.

இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.

சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com