ஆணவம் நீக்கும் பைரவர்

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.
ஆணவம் நீக்கும் பைரவர்
Published on

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.

இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.

எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.

தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.

மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com