

கவுஹாத்தி:
நாகாலாந்தில் நிலவிவந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று பிற்பகல் ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெலியாங்கிற்கு ஆளுனர் ஆச்சாரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஜெலியாங்கை கட்சியில் இருந்து நீக்குவதாக நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் செயல் தலைவர்களான ஹஷ்கா யெப்தோமியும், அபாக் பாங்கனரும் அறிவித்துள்ளனர். ஜெலியாங் தொடர்ந்து கட்சியில் பிளவு உண்டாக்கும் எண்ணத்தோடு பிடிவாதமாக செயல்பட்டு வந்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய ஜெலியாங் “கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியில் இருந்து நீக்கினாலும் சட்டசபைக்குள் உறுப்பினர் பதவியை எந்த வகையிலும் பாதிக்காது. முதல்வராக எனது பணியை தொடர்வேன்” என கூறியுள்ளார்.