

ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சாஹலுக்கு நேற்றைய தினம் சரியாக அமையவில்லை. அவரது பந்து வீச்சை தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் கிளாசன் துவம்சம் செய்தார்.
கிளாசன் 30 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தார். சாஹல் 4 ஓவரில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 16 ரன்கள் வழங்கியுள்ளார். இதில் 2 பவுண்டரி, 7 சிக்ஸ், ஒரு வைடு ஆகும். நான்கு பந்துகளில் மட்டுமே ரன் விட்டுக்கொடுக்கவில்லை.
64 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் என்ற மோசமான சாதனையை சாஹல் பதிவு செய்துள்ளார். இதற்கு முன் ஜோகிந்தர் சர்மா 4 ஓவரில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது. இதை சாஹல் முந்தியுள்ளார்.
அயர்லாந்து வீரர் மெக்கார்த்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 69 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ரன்னாகும். தென்ஆப்பிரிக்கா வீரர் அபோட் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜெயசூர்யா, டை, வீலர், சாஹல் ஆகியோர் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.