ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி

ஆந்திராவின் மயிலாபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. #Mylavaram #YSRCongress #workersclashwithcops
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி
Published on

ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் வரும் 11ம் தேதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை பிடிக்க டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜெகன் ​மோகன் ரெட்டி இருந்த வாகனத்தை நோக்கி தொண்டர்கள் ஓடிவந்தனர். 

இதைக்கண்ட போலீசார் அக்கட்சி தொண்டர்களை தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே மோதல் உருவானது.

ஒரு கட்டத்தில் போலீசார் லேசான தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. #Mylavaram #YSRCongress #workersclashwithcops

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com