நித்திரவிளை அருகே வெளிநாடு செல்ல முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

வெளிநாடு செல்ல முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நித்திரவிளை அருகே வெளிநாடு செல்ல முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

நாகர்கோவில்:

நித்திரவிளையை அடுத்து ஆலம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 30). இவருக்கு குடி பழக்கம் உள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கு பல்வேறு முயற்சிகள் செய்துவந்தார். ஆனால் வெளிநாடு செல்ல முடியவில்லை. இதனால் மனவருத்தத்தில் காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய மனைவி இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயதாஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com