திருப்பூரில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

திருப்பூரில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருப்பூர்:

திருப்பூர் பிஎன் ரோடு பூலுவபட்டி அடுத்த தியாகி பழனிச்சாமி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (21) இவரது மனைவி கவிதா.

இந்த நிலையில் சுரேஷ்குமார் குடிப்பழக்கம் இருந்ததால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல் சுரேஷ்குமார் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கவிதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கணவர் எவ்வளவு தடுத்தும் மனைவி சென்றதால் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட சுரேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com