திருச்செந்தூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்- ஒருவர் கைது

திருச்செந்தூர் அருகே பைக்கில் மோதுவது போல் சென்ற நபரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைது
கைது
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலபுரம் சுனாமி நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கன்னிமுத்து (வயது 22), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று கன்னிமுத்துவின் சகோதரி அதே பகுதியில் உள்ள தெரு நல்லி குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரவின் என்ற சிலுவை பிரவின்ஸ்டன் (19) என்பவர் பைக்கில் கன்னிமுத்து சகோதரி மீது மோதுவது போல் பைக்கில் சென்றுள்ளார். இது குறித்து அறிந்த கன்னிமுத்து, பிரவின் என்ற சிலுவை பிரவின்ஸ்டனிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  

பின்னர் கன்னிமுத்து கிறிஸ்தவ பாதரை பார்த்து சம்பவத்தை கூறி சமாதானம் பேசி விடலாம் என நினைத்து பிளோமி நகர் சென்றார். அப்போது சிலுவை பிரவின்ஸ்டன் மற்றும் அவருடைய நண்பர்களான சிவா என்ற அந்தோணிசிவா, கவாஸ்கர், வசந்த், கபில் ஆகிய 5 பேரும் சேர்ந்து கன்னிமுத்துவை வழிமறித்து அவதூறாக பேசி, அடித்து உதைத்து தாக்கினர்.   

இது குறித்து கன்னிமுத்து அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிலுவை பிரவின்ஸ்டனை கைது செய்தனர். மேலும் 4 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com