மங்களமேடு அருகே வாலிபர் மர்ம மரணம்: கொலையா? போலீசார் விசாரணை

மங்களமேடு அருகே மரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களமேடு அருகே வாலிபர் மர்ம மரணம்: கொலையா? போலீசார் விசாரணை
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த மங்களமேடு அருகே உள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. செல்வராஜின் உறவினர் ஆலத்தூர் நொச்சிகுளத்தில் வசித்து வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அந்த தூக்க நிகழ்ச்சியில் செல்வராஜ் கலந்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தில் உள்ள ஒரு மரத்தில் செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜின் உடலில் காயங்கள் உள்ளது. அதனால் அவரை யாரும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? செல்வராஜுக்கு  குடி பழக்கம் உள்ளதால் அந்த தகராறில் கொலை சம்பவம் எதுவும் நடந்ததா அல்லது உறவினர் இறந்த  துக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணங்களில் மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com