போலீசார் விசாரணை
செய்திகள்
மதுரையில் வாலிபர் கொலை? - போலீசார் விசாரணை
மதுரையில் வாலிபர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மேலமடை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 30). இவர் சில நாட்களுக்கு முன்பு மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் ஜெயக்குமார் வீட்டில் இருந்து வெளியேறினார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தத்தனேரி வைகையாற்று கரையோரப்பகுதியில் வாலிபர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தவர் மாயமான ஜெயக்குமார் என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணமானவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமாரின் தந்தையும், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தனர்.

