கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராஜசேகர் - வருண்ராஜ்
ராஜசேகர் - வருண்ராஜ்
Published on

சிப்காட்(ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோடு, அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வருண்ராஜ் (வயது 26), ராணிப்பேட்டை வக்கீல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (23). இருவரும், கடந்த மே மாதம் ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு வாலிபர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து வருண்ராஜ், ராஜசேகர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com