

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவிக்கோட்டை கிராமத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மெய்கை விநாயகர் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டியன் என்பவரது மகன் வேல்முருகன் என்பவரை அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் ஸ்டாலின் (38), அப்பாத்துரை மகன்கள் ராமதாஸ் (42), சிவதாஸ் (48), பிரமையன் மகன் சண்முகம்(52) உள்ளிட்டோர் சேர்ந்து கொலை செய்தனர்.
இதில் 2016-ம் ஆண்டு ஸ்டாலினுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பட்டுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிபதி பத்மநாதன் உத்தரவிட்டார். அதனை எதிர்த்து இரண்டு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து உத்தரவின் பெயரில் அதே பட்டுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிபதி தற்போதைய நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் என்பவரது உத்தரவின் பெயரில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், மூவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், சண்முகம் என்பவருக்கு ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. #Tamilnews