

ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கு உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் 50 வயதுடைய இவரது மனைவி மட்டும் வீட்டில் தனியா இருந்தார். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த பெண் வீட்டின் முன் பக்க கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அக்கம், பக்கத்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அந்த வாலிபர், பெண் தனியாக இருந்த வீட்டிற்குள் புகுந்தார்.
இதைப் பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அந்த வாலிபர் அவரது கையைப்பிடித்து இழுத்து அவரை கற்பழித்தார். இதனால் பயந்துபோன அந்த பெண் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதை பார்த்ததும் பயந்துபோன அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
வாலிபர் கற்பழித்ததில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடந்த சம்பவம் பற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.