திருமங்கலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

திருமங்கலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் பாண்டியராஜன் (வயது 23), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருடைய சகோதரி திருமணம் நேற்று விருதுநகரில் நடந்தது. இதில் பங்கேற்று விட்டு மாலையில் பாண்டியராஜன் தனது நண்பர் வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய முத்துப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சகோதரியின் திருமண நாளிலேயே தம்பி விபத்தில் இறந்த சம்பவம் அந்த குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com